சென்னை குயர் இலக்கிய விழா 2019
குயர் சென்னை கிரானிக்கள்ஸின் முறையான அனுமதி பெறாமல் ஊடகங்கள் இந்தப் பக்கத்தில் உள்ள புகைப்படங்களை பயன்படுத்த வேண்டாம்.
பேச்சாளர்களுடன் பேச விரும்பினாலோ மேலும் தகவல்களுக்கு qlf@queerchennaichronicles.com எனும் முன்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
ஹரி இராஜலெட்சுமி
எழுத்தாளர், கலைஞர்
www.hrajaledchumy.com எனும் இணையதளத்தில் காணலாம். லண்டனில் வசிக்கும் இவரது பல படைப்புகள் இலங்கையிலும் புலம்பெயர் இலக்கிய இதழ்களிலும் வெளியாகியுள்ளன. ஹரி இராஜலெட்சுமியின் எழுத்துக்கள் மற்றும் கலைப்படைப்புகளை
மாரி ஸ்விக்-மைத்ரேயி
ஓவியர், சமூக வரலாற்றாளர்
ஈக்வாலிட்டி லேப்சின் ஆராய்ச்சி இயக்குனரான மாரி, தலித் ஹிஸ்டரி மாதத்தின் இணை நிறுவனராகவும் உள்ளார். காஸ்ட் இன் தி யுனைடட் ஸ்டேட்ஸ் (Caste in the United States) எனும் ரிப்போர்டில் எழுத்தாளர்களில் ஒருவராகவும் இருக்கும் இவர் TwoCircles.net-ன் எக்ஸிகியூட்டிவ் எடிட்டராகவும் இருக்கிறார்.
ஷால்ஸ் மஹாஜன்
எழுத்தாளர், செயல்பாட்டாளர்
எந்தப் பாலினத்தோடும் அடையாளப்படுத்திக்கொள்ளாத பெண்ணியவாதியான இவர் பம்பாயில் வசிக்கிறார். லாபியா எனும் குயர் பெமினிஸ்ட் அமைப்புடன் இருபது ஆண்டுகளாக பணிபுரியும் இவர் Timmi in Tangles, Timmi and Rizu, A Big Day for the Little Wheels மற்றும் No Outlaws in the Gender Galaxy போன்ற படைப்புகளை உருவாக்கியுள்ளார்.
வைஜெயந்தி
ஓவியர்
திருச்சியில் பிறந்த வை தற்போது பெங்களூருவில் பணிபுரிகிறார். பால் அடையாளங்கள் மற்றும் திரவநிலைப் பாலினம் குறித்து கற்பதிலும் கற்பிப்பதிலும் ஆர்வமுடையவர். இவரது படைப்புகள் குயர் சென்னை கிரானிக்கள்ஸ் மற்றும் கேய்சி - மும்பையில் வெளிவந்துள்ளன.
கிஷோர்
எழுத்தாளர்
கோழிக்கோட்டில் பிறந்த கிஷோ ர்குமார் மென்பொறியாளராக பலவருடங்களாகப் பணிபுரிகிறார். இவரது சுயசரிதையும் கட்டுரைகளும் “ரண்டு புருஷன்மார் சும்பிக்கும்போள்” எனும் தலைப்பில் 2017-ம் ஆண்டில் வெளியானது. கேரள பால்புதுமையினருக்கான “குயர்லா” எனும் அமைப்பின் குழு உறுப்பினராகவும் இருக்கிறார்.
சாலை செல்வம்
எழுத்தாளர்
பெண்ணிய மற்றும் கல்வித்தளத்தில் தொடர்ந்து இயங்கி வருபவர் . பெண்களுக்கான சுட்டும் விழிச்சுடர், குழந்தைகளுக்கான கூழாங்கல் இதழ்களில் இவரது பணிகுறிப்பிடத்தக்கது. குழந்தை இலக்கியம், குழந்தைகளுக்கான வாசிப்புப் பணிகள் என இவரது பணிகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது . தமிழகப்பெணகள் ஒருங்கிணைப்பு,“கூடு” பெண்கள் வாசிப்பரங்கம் ஆகிய தளங்களில் பெண்கள் தொடர்பான உரையாடல்களில் ஈடுபட்டு வருபவர். புதுமைப்பாலியல் தொடர்பான விவாதங்களில்/தேவைப்படும் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்பவர். அம்மாவின் சேட்டைகள் என்ற தொடரில் குழந்தையின் பால் அடையாளத்தை குறிப்பிடாமல்எடுத்துச்செல்ல முயன்றிருப்பது, குழதைகள், ஆசிரியர்களோடு பாலியல் குறித்து உரையாடுவது என தனக்குக் கிடைக்கும் வாய்ப்புகளில் சமூகப்பாலியல் மற்றும் புதுமைப்பாலியல் விஷயங்களில் கவனம் செலுத்துபவர். அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்காக பணியாற்றும் நிறுவனத்தில் தற்போது பணியாற்றி வருகிறார்.
வ கீதா
எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்
பெண்ணியவாதியும் போராளியுமான வ கீதா சாதி, பாலினம், கல்வி மற்றும் மக்கள் உரிமைகள் சார்ந்து எழுதியுள்ளார். பல்வேறு இதழ்களிலும் பத்திரிக்கைகளிலும் அவரது எழுத்துக்கள் மற்றும் மொழிபெயர்ப்புகள் மூலம் தொடர் பங்களிப்பு வழங்கிக் கொண்டிருக்கிறார்.
தமிழச்சி தங்கபாண்டியன் MP
கவிஞர்
திராவிடக்கொள்கைகள் உடையவர், கவிஞர், பேராசிரியர், ஆராய்ச்சி அறிஞர் எனும் பல முகங்களையுடைய தமிழச்சி தங்கபாண்டியன் தென்சென்னைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். சமூக, கலாச்சார, இலக்கிய பங்களிப்புகளுக்காக பல விருதுகளையும் பெற்றுள்ளார். தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது, நீதியரசர் எம் எம் இஸ்மாயில் விருது, யூனிசெப்பின் கவுரவச் சான்றிதழ் ஆகியவை குறிப்பிடத்தக்க சில விருதுகள்.
சிறப்புரை
கிருஷ்ணா
விழா ஒருங்கிணைப்பாளர்
சென்னைவாசியான கிருஷ்ணா அரசு பள்ளிகளுடன் பணியாற்றும் ஒரு கல்வியாளர்.
செந்தில்
நிகழ்வு இயக்குனர்
செந்தில் குவஹாத்தி ஐஐடியில் பட்டம்பெற்று வடிவமைப்பாளராக பணியாற்றும் வரைகலைஞர். பட்டப்படிப்பில் இறுதியாண்டு ஆய்வுக்கட்டுரை பணியிடங்களில் பால்புதுமையினர், மற்றும் பணியிடங்களை மேலும் பாதுகாப்பாக்குவது குறித்து எழுதியுள்ளார். புராணக்கதைகள், நாட்டுப்புறக் கதைகளில் ஆர்வங்கொண்டவர். 2010இலிருந்து LGBTQ+ இயக்கங்களில் தன்னார்வலராக செயலாற்றி வருகிறார். குழந்தைகள், பகுத்தறிவு மற்றும் பால்புதுமை இலக்கியங்களின் தீவிர வாசகர்.
ஷில்பா
விழா ஒருங்கிணைப்பாளர்
மருத்துவப் பட்டதாரியான ஷில்பா, பாலின மற்றும் அ/பாலீர்ப்பின் நுணுக்கங்களிளும், அவற்றின் அரசியலிலும் ஆர்வமுடையவர். பால்புதுமையினருக்கு துணை நிற்கும், எட்டக் கூடும் மருத்துவப் பராமரிப்பு சேவை, (குறிப்பாக அரசு மையங்களில்) அமையும் வருங்காலத்தை எதிர்நோக்குகிறார்.
கிரீஷ்
விழா இயக்குனர்
கிரீஷ் எழுத்தாளர் மற்றும் வரைகலைஞர். தற்போது விளம்பரத் துறைய்ல் பணியாற்றும் கிரீஷ் முன்னர் திரைத்துறையில் துணைக் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். பால்புதுமையினர் நலனுக்காக செயல்படும் பல அரசுசாரா நிறுவனங்களோடும் சென்னையில் பணியாற்றியுள்ளார். 2015இல் ஆனந்த விகடனின் கலாமின் காலடிச்சுவட்டில், களத்தில் 100 இளைஞர்கள் திட்டத்துக்கு தேர்ந்தெடுக்கப் பட்டவர். இவரது முதல் புத்தகமான விடுபட்டவை 2018 சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளியானது.